AIA தன் காப்புறுதித் திட்டதாரருக்கு oDoc app மூலம் வரையறையற்ற இலவச மருத்துவ  ஆலோசனைச் சந்திபுக்களை வழங்க oDoc உடன் இணைகின்றது.

நலன்கள்

440+ பொது மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் வரையறையற்ற, இலவச 24/7 மணி நேர oDoc வீடியோ இணைப்புக்கள்.

Your corporate subscription gives you unlimited access to all doctors on the oDoc platform. No more wasted time, see your doctor with just a couple of taps.

சந்தை விலையிலும் 10% கழிவில் மருந்துகள், 25% கழிவில் நடமாடும் ஆய்வு கூடச் சேவை. கூடவே இலவச மருந்து டெலிவரி.

Get your medicine delivered straight to your doorstep, with just the click of a button. Alternatively, your oDoc generated E-prescription is accepted islandwide.

இச் சேவை முற்றிலும் இலவசமானது. தவணைக் கொடுப்பனவோ, ஒவ்வொரு வீடியோ இணைப்பிற்கென கட்டணத் தொகையோ இல்லை.

We know that your immediate family is important to you, and as such, it is our pleasure to cover them at no additional cost to you.

சேவைக்கெனப் பதிந்து கொள்ள கடன் அட்டை விபரங்கள் அவசியமில்லை.

Your payment details are not required when signing up with oDoc during the trial period. You will only be charged if you sign up with oDoc again, after the trial is over.

0770773333 என்ற இலக்கத்தில் 24/7 வாடிக்கையாளர் சேவை.

Want help signing up or booking a doctor? Call our customer care hotline and one of our team will guide you through the process!

உங்கள் துணை மற்றும் பிள்ளைகளுக்கும் முற்றீலும் இலவசமான சேவை.

We know that your immediate family is important to you, and as such, it is our pleasure to cover them at no additional cost to you.

440+ பொது மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் வரையறையற்ற, இலவச 24/7 மணி நேர oDoc வீடியோ இணைப்புக்கள்.


சந்தை விலையிலும் 10% கழிவில் மருந்துகள், 25% கழிவில் நடமாடும் ஆய்வு கூடச் சேவை. கூடவே இலவச மருந்து டெலிவரி.


இச் சேவை முற்றிலும் இலவசமானது. தவணைக் கொடுப்பனவோ, ஒவ்வொரு வீடியோ இணைப்பிற்கென கட்டணத் தொகையோ இல்லை.


சேவைக்கெனப் பதிந்து கொள்ள கடன் அட்டை விபரங்கள் அவசியமில்லை.


0770773333  என்ற இலக்கத்தில் 24/7 வாடிக்கையாளர் சேவை


உங்கள் துணை மற்றும் பிள்ளைகளுக்கும் முற்றீலும் இலவசமான சேவை.


விதிமுறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.

விதிமுறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

oDoc என்பது என்ன?





எளிமையாக சொல்வதானால் oDoc என்பது ஒரு மருத்துவருடன் தொடர்பு கொணடு உங்களுக்கு தேவையான கவனிப்பை பெற்றுக் கொள்வதற்கான இலகுவான வழியாகும்.

oDoc என்பது உங்கள் தொலைபேசியின் மூலமாக வீடியோ, ஒலிவழி மற்றும் எழுத்து வழி ஆலோசனைகளைப் பெறுவதற்கென ஒரு மருத்துவருடன் உங்களை இணைக்கும் ஒரு app ஆகும்.

இலங்கை மருத்துவச் சங்கத்தில் (SLMC) அங்கீகாரம் பெற்ற 400க்கு அதிகமான பொது மருத்துவர்களையும் மருத்துவ நிபுணர்களையும் முன்கூட்டியே உங்களுக்கெனப் பதிவு செய்ய, மருத்துவ ஆலோசனை பெற (மருத்துவம் தேவைப்பட்டால்) ஒரு மருந்துச் சீட்டை பெற ஏன் மருந்துகளை விநியோகம் செய்வதற்குக் கூட oDoc வழிவகுக்கிறது. oDoc இனூடாக மருத்துவ ஆய்வுகள் செய்ய வேண்டுமெனில் நடமாடும் ஆய்வூகூடத்தை உங்கள் வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வரவழைத்துக் கொள்ள முடியூம்.

அடுத்த முறை நீங்கள் நோயுற்றால் அல்லது ஒரு மருத்துவரோடு உரையாட வேண்டுமெனில் நீங்கள் உங்கள் நேரத்தையும் பணத்தையும் போக்குவரத்திலும் காத்திருக்கும் அறைகள் அல்லது வரிசைகளிலும் வீணாக்காமல் oDoc இனைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் ஒரு oDoc சந்தாதாரராக இருந்தால் மருத்துவரிடம் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பெறும் அனைத்து வீடியோ ஒலிவழி மற்றும் எழுத்து வழி ஆலோசனைகள் முற்றிலும் இலவசமாகும். மருத்துவர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளையூம் oDoc மேற்கொள்ளும்.

உங்களுடைய மருத்துவரை சிகிச்சை நிலையத்தில் அல்லது மருத்துவமனையொன்றில் சந்திப்பதற்கு முற்பதிவை மேற்கொள்ளும் இலகுவான வழியாகவும் oDoc இருக்கிறது.

மேலதிக தகவல்களைப் பெறவேண்டுமாயின் தயவு செய்து www.odoc.life இற்கு வருகை தாருங்கள், 0770773333 என்ற இலக்கத்தை அழையுங்கள் அல்லது info@odoc.life இற்கு எந்த நேரத்திலும் மின்னஞ்சல் அனுப்புங்கள். என்னுடைய சக பணியாளர்களும் நானும் எப்போதும் உங்களுக்கு உதவத் தயாராக இருப்போம்.

oDoc ஐ தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்வது எப்படி?





உங்களிடம் ஒரு அண்ட்ரொய்ட் தொலைபேசி இருந்தால் oDoc app ஐ தரவிறக்கம் செய்ய Play Store இற்கு செல்லுங்கள்.

iPhone ஒன்றில் தரவிறக்கம் செய்ய App Store வாருங்கள.

நீங்கள் app இனைத் தரவிறக்கம் செய்தததும் எளிமையான பதிவு செய்யும் செய்முறையைப் பின்பற்றுங்கள்.

நீங்கள் பதிவு செய்ததும் அதன் பின்பு நீங்கள் தேடுதல் பட்டையை (Search Bar) பயன்படுத்தி அல்லது பக்கத்தினூடாக ஸ்குறௌல் (Scroll) செய்து உங்கள் மருத்துவரைக் கண்டு கொள்ளுங்கள்.

மருத்துவர் ஒருவரின் விபரங்களைப் பார்க்க Profile இனைத் தட்டுங்கள்.

மருத்துவருடன் Chat சேவையைப் பயன்படுத்தி முன்கூட்டியே உங்கள் வருகையை பதிவு செய்து, நோய்க் குறிப்புகளை மருத்துவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலதிக தகவல்களைப் பெறவேண்டுமாயின் தயவு செய்து www.odoc.life இற்கு வருகை தாருங்கள், 0770773333 என்ற இலக்கத்தை அழையுங்கள் அல்லது info@odoc.life இற்கு எந்த நேரத்திலும் மின்னஞ்சல் அனுப்புங்கள். என்னுடைய சக பணியாளர்களும் நானும் எப்போதும் உங்களுக்கு உதவத் தயாராக இருப்போம்.

தொலைவிலிருந்து பெற்றுக்கொள்ளும் மருத்துவ ஆலோசனை வெற்றியளிக்குமா?





உங்களுடைய மருத்துவர் நண்பர்களில் ஒருவரிடம் அவர் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் சிகிச்சை அளிப்பதுண்டா என் வினவினால் “ஆம்” எனப் பதில் கிடைக்கும் வாய்ப்பே அதிகம்.

உயர்ந்த, தரமான மருத்துவக் கவனிப்பை இலகுவாக நாங்கள் எல்லோருமே அடைவதற்கு oDoc ஒரு வழியாக இருக்கிறது.

தொலைபேசி வழியாக oDoc இல் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கும், நேரிச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்கும் பெரிதளவில் எந்த வேறுபாடும் கிடையாது.

உங்களுடைய மருத்துவர் உங்களது வயது, ஒவ்வாமை மற்றும் ஏற்கனவே உங்களுக்கு இருந்த நிலைமைகள் பற்றி கேட்பார்.

அதன் பின்பு நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நோய் அறிகுறிகள் எவ்வளவு காலம் நீடிக்கின்றது, மற்றும் அந்த நோய் அறிகுறிகள் கூடிக் கொண்டிருக்கின்றனவா அல்லது குறைந்து கொண்டிருக்கின்றனவா என்பனவற்றைப் பற்றி கலந்துரையாடுவீர்கள்.

உங்களுக்கு சிகிச்சை அளிக்கப் போதுமான தகவல்கள் அக் கலந்துரையாடலில் வெளி வரவில்லை என்று மருத்துவர் உணர்ந்தால், அவர்கள் உங்களுக்கு நேரடியான உடல் ரீதியான பரிசோதனைகள் அவசியம் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தி, மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறும்படியோ அல்லது ஒரு மருத்துவரை சந்திக்கும்படியோ அறிவுறுத்துவார்கள்.

மருத்துவர்கள் நேரடியாகத் தேகப் பரிசோதனை செய்து நோயறியும் போது பெற்றுக் கொள்ளும் அதே தொகையைத் தான் oDoc இல் நோயறியும் போதும் பெற்றுக் கொள்வதால், oDoc இல் வைத்துத் தான் நோயைக் கண்டு பிடித்து முடிப்பதற்குரிய அவசியமோ, நாட்டமோ மருத்துவர்களுக்கு இல்லை.

அமெரிக்க மருத்துவ சங்கம் தன் ஆய்வில் பொதுவாகத் தோன்றும் நோய்களில் 75 வீதமானவற்றை வீடியோ மற்றும் ஒலி வழி மருத்துவச் சந்திப்புக்களால் சரியாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனக் கண்டறிந்துள்ளது. உலகின் முன்னணி மருத்துவ ஆய்வாளர்களால் ேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தொலைவழி மருத்துவச் சந்திப்பு, நேரடி மருத்துவச் சந்திப்பிற்குச் சற்றும் சளைத்ததல்ல என்ற உண்மை புலப்பட்டது. Cochrane என்ற அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட 90க்கு மேற்பட்ட சிகிச்சை ஆய்வுகளின் முடிவே இது.

தொலைவழிச் சுகாதார சேவை உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதோடு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ருவாண்டா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

மேலதிக தகவல்களைப் பெறவேண்டுமாயின் தயவு செய்து www.odoc.life இற்கு வருகை தாருங்கள், 0770773333 என்ற இலக்கத்தை அழையுங்கள் அல்லது info@odoc.life இற்கு எந்த நேரத்திலும் மின்னஞ்சல் அனுப்புங்கள். என்னுடைய சக பணியாளர்களும் நானும் எப்போதும் உங்களுக்கு உதவத் தயாராக இருப்போம்.

தொலைபேசி வழி ஆலோசனை பெறுதல் மூலம் சிகிச்சையளிக்கக் கூடியவை எவை?





oDoc போன்ற தொலைவழி மருத்துவத் தளங்கள் மூலம் மருத்துவர்கள் சிகிச்சையளிக்கும் மிகப் பொதுவான நோய்கள் குளிர் காய்ச்சல், பீனிசம், சமிபாடின்மை, குழந்தைகளின் நோய்கள், தோல் நோய்கள் என்பனவாம். மேலும், உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் தொடர்பான ஆலோசனைகள், வலி நிவாரணம் தொடர்பான ஆலோசனைகள், பெண்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள், பாலியல் ஆரோக்கியம் தொர்பான பிரச்சினைகள் மற்றும் உள ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளுக்கான ஆலோசனைகள் என்பனவும் பரவலாக தொலைவழி மருத்துவம் மூலம் வழங்கப்படுகின்றது.

வீடியோ வழி மருத்துவர் சந்திப்புக்கள் இரண்டாம் நிலை அபிப்பிராயம் பெறல், தொடார் மருத்துவ ஆலோசனை பெறல், மருத்துவ ஆய்வுப் பெறுபேறுகளை மதிப்பீடு செய்தல், பொதுவான சுக ஆரோக்கியப் பிரச்சினைகள் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளல் என்பவற்றிற்குப் பொருத்தமான தளமாகவும் இருக்கின்றது.

மேலதிக தகவல்களைப் பெறவேண்டுமாயின் தயவு செய்து www.odoc.life இற்கு வருகை தாருங்கள், 0770773333 என்ற இலக்கத்தை அழையுங்கள் அல்லது info@odoc.life இற்கு எந்த நேரத்திலும் மின்னஞ்சல் அனுப்புங்கள். என்னுடைய சக பணியாளர்களும் நானும் எப்போதும் உங்களுக்கு உதவத் தயாராக இருப்போம்.

நான் ஒரு செல்லுபடியான மருந்து சீட்டைப் பெறமுடியூமா?





oDoc வழியாக வழங்கப்படும் அனைத்து மருந்து சிட்டைகளும் இலங்கை மருத்துவ சங்கத்தில் (SLMC) பதிவூ செய்யப்பட்ட மருத்துவர்களாலேயே வழங்கப்படுகின்றன.

இவை ஒவ்வொரு மருத்துவருக்கும் தனித்துவமாக வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான, கடவை சொற்களால் பாதுகாக்கப்பட்ட கணக்குகள் மூலமே வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு மருந்து சிட்டையும் மருந்து சிட்டையை வழங்கும் மருத்துவரை அடையாளம் காட்டுவதுடன் அவருடைய பெயர், இலங்கை மருத்துவ சங்க பதிவிலக்கம், குறித்த மருத்துவருடைய முத்திரை மற்றும் கையொப்பத்தைக் கொண்டிருக்கும்.

நோயாளியினுடைய பெயர் அடையாளம் காட்டப்பட்டிருப்பதுடன் நோயாளிக்கென வழங்கப்படும் மருந்து சிட்டையானது வழங்கப்பட்டிருக்கும் மருந்துகளை இலகுவாக வாசித்துக் கொள்ள வசதியாக தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் இருக்கும்.

மேலும், குறித்த மருந்துச் சிட்டையில் பட்டியலிடப்பட்டிருக்கும் மருந்துகள் யாவும் பெயரிடப்பட்டிருக்கும் நோயாளியின் பாவனைக்கெனத் தான் வழங்க எத்தனிப்பதையும், அம் மருந்துகளை நோயாளிக்கு விநியோகம் செய்வதை தான் அங்கீகரிப்பதையும் மருத்துவர் தெளிவாக குறிப்பிட்டிருப்பார்.

இந்த அம்சங்கள் ஊடாக oDoc வழியாக வழங்கப்படும் மருந்து சிட்டைகள் யாவும் 2015ம் ஆண்டின் 05 இலக்க தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டம், 1980ம் ஆண்டின் 27ம் இலக்க ஒப்பனைப் பொருட்கள், சாதனங்கள், மற்றும் மருந்துகள் சட்டம் (1985 மார்கழி 02ம் திகதி பிரசுரிக்கப்பட்ட 378/3 இலக்க விசேட வர்த்தமானி) மற்றும், திருத்தப்பட்ட 2006ம் ஆண்டின் 19ம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம் என்பனவற்வற்றின் கீழ் செல்லுபடியானவை.

மேலதிக தகவல்களைப் பெறவேண்டுமாயின் தயவு செய்து www.odoc.life இற்கு வருகை தாருங்கள், 0770773333 என்ற இலக்கத்தை அழையுங்கள் அல்லது info@odoc.life இற்கு எந்த நேரத்திலும் மின்னஞ்சல் அனுப்புங்கள். என்னுடைய சக பணியாளர்களும் நானும் எப்போதும் உங்களுக்கு உதவத் தயாராக இருப்போம்.

யார் எல்லாம் இதனால் நன்மையடைவார்கள்?





உங்களுடைய oDoc தவணை இணைப்பின் மூலம் நீங்கள், உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகள் பயனடையலாம். உங்களுடைய சந்தாவின் மூலம் இவர்களில் மூன்று பேரை oDoc சேவைகளுக்கு உள்வாங்கலாம்.

இவர்கள் எல்லோருமே oDoc app இன் மூலம் வரையறையற்ற இலவச வீடியோ, ஒலிவழி மற்றும் எழுத்து மூலமான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வீர்கள். எந்தவொரு மருத்துவச் சந்திப்பிற்கும் பிரத்தியேகமான வேறெந்தக் கட்டணங்களும் இல்லை.

oDoc மூலம் உங்களுக்கு மேலதிக பல சலுகைகளும் கிடைக்கின்றது. இலவச மருந்து விநியோகம், போக்குவரத்துக் கட்டணமின்றிய நடமாடும் ஆய்வூகூட சேவை, கழிவு விலையில் மருந்துகள் மற்றும் ஆய்வுகூடச் சேவைகள் என்பவை இவற்றில் சில. அத்தோடு 30 சித்திரை 2019 வரை oDoc app மூலம் நீங்கள் செய்யும் அனைத்து நேரடி மருத்துவச் சந்திப்பு முற்பதிவுகளிலும் 25% விலைக் கழிவு.

நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மேற் சொன்னவற்றிற்குப் பொருந்தும் என்பதை தயவு செய்து கவனத்துடன் கொள்வதுடன் மேலதிக தகவல்களைப் பெறவேண்டுமாயின் தயவு செய்து www.odoc.life இற்கு வருகை தாருங்கள், 0770773333 என்ற இலக்கத்தை அழையுங்கள் அல்லது info@odoc.life இற்கு எந்த நேரத்திலும் மின்னஞ்சல் அனுப்புங்கள். என்னுடைய சக பணியாளர்களும் நானும் எப்போதும் உங்களுக்கு உதவத் தயாராக இருப்போம்.

நான் செலுத்த வேண்டியது என்ன? எனது குடும்பத்தவரை எப்படி இணைத்துக் கொள்வது?





உங்களுடைய வேலை வழங்குனரோ, காப்புறுதி வழங்குனரோ உங்களுடைய oDoc கட்டணத்தைச் ெலுத்துவாகள் என்பதால் நீங்கள பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

இதனால் நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் வரையறையற்ற இலவச வீடியோ, ஒலிவழி மற்றும் எழுத்து மூலமான மருத்துவர் சந்திப்புக்களை oDoc வழியாக மேற்கொள்ளலாம்.

உங்கள் குடும்பத்தவரை இச் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு 0770773333 என்ற இலக்கத்தை அழையுங்கள். அல்லது info@odoc.life இற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

இதனால் எனக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?





oDoc பாவனையாளர்களுக்குக் கிட்டும் நன்மைகள் வருமாற:

  • oDoc app உள்ள எல்லா மருத்துவர்களிடமிருந்தும் வரையறையற்ற வீடியோ வழி மருத்துவச் சந்திப்புக்கள்.
  • 42 சிறப்புத் துறைகளில் தேர்ச்சி பெற்ற, 400 இற்கு மேற்பட்ட மருத்துவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளும் வசதி.
  • எந்த நாளும், 24 மணித்தியாலமும் எம் தளத்தில் பொது மருத்துவர்கள் சேவையில் இருப்பார்கள். நீங்கள் அழைத்து 3 நிமிடத்துக்குள் உங்களை மீளத் தொடர்பு கொள்வார்கள்.
  • மருந்து சிட்டைகள் உங்கள் தொலைபேசிக்கு நேரடியாக அனுப்பப்படும்.
  • oDoc app வழியாகச் செய்யப்படும் அத்தனை நேரடி மருத்துவச் சந்திப்பு முற்பதிவுகளுக்கும் 25% விலைக் கழிவு.
  • மருந்துகள் வீட்டிற்கு இலவசமாக விநியோகிக்கப்படும். மருந்துக்கான கட்டணத்தில் 10% வரையில் கழிவுகள்.
  • போக்குவரத்து கட்டணமின்றியஉங்கள் நடமாடும் ஆய்வூகூட சேவை. பரிசோதனிக் கட்டணத்தில் 25% வரையில் கழிவு.

இவை நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டவை. சில சேவைகள் கால வரையறை கொண்டவை. மேலதிக தகவல்களைப் பெறவேண்டுமாயின் தயவு செய்து www.odoc.life இற்கு வருகை தாருங்கள், 0770773333 என்ற இலக்கத்தை அழையுங்கள் அல்லது info@odoc.life இற்கு எந்த நேரத்திலும் மின்னஞ்சல் அனுப்புங்கள். என்னுடைய சக பணியாளர்களும் நானும் எப்போதும் உங்களுக்கு உதவத் தயாராக இருப்போம்.

இத் தளத்திலே உள்ள மருத்துவர்கள் யார்?





oDoc app இல் உள்ள 400க்கு மேற்பட்ட மருத்துவர்கள் அத்தனை பேரும் இலங்கை மருத்துவ சங்கத்தில் (SLMC) அங்கீகாரம் பெற்றவர்கள். மேலும், இத்தளத்திலுள்ள அனைத்து மருத்துவர்களும் குறைந்த பட்சம் 5 ஆண்டுச் சேவை அனுபவம் கொண்டவர்கள்.

oDoc தளத்தில் 200 இற்கு மேற்பட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் 40 இற்கும் அதிகமான சிறப்புத் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். இதில் குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், தோல் வியாதி மருத்துவம், உளவியல் மருத்துவம் மற்றும் பாலியல் ஆரோக்கிய மருத்துவம் என்பனவும் அடங்கும். oDoc இல் இருக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் யாவரும் பரிசீலனைச் சபையின் சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது சிறப்பு மருத்துவ நிபுணராகக் கொள்ளப்பட இலங்கை மருத்துவ சங்கம் (SLMC) நிர்ணயித்திருக்கும் நிபந்தனைகளை சந்தித்தவர்கள். oDoc இல் இணைந்திருக்குக்கும் சிறப்பு மருத்துவர்கள் பலர் 10, 15 மற்றும் 20 வருடங்களுக்கு மேலான அனுபவம் பெற்றவர்கள்.

oDoc இல் இணைந்திருக்கும் மருத்துவர்கள் யாவரும் நீங்கள் பிரபல அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சந்திக்கும் அதே மருத்துவர்களே.

இவை நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டவை. சில சேவைகள் கால வரையறை கொண்டவை. மேலதிக தகவல்களைப் பெறவேண்டுமாயின் தயவு செய்து www.odoc.life இற்கு வருகை தாருங்கள், 0770773333 என்ற இலக்கத்தை அழையுங்கள் அல்லது info@odoc.life இற்கு எந்த நேரத்திலும் மின்னஞ்சல் அனுப்புங்கள். என்னுடைய சக பணியாளர்களும் நானும் எப்போதும் உங்களுக்கு உதவத் தயாராக இருப்போம்.

இந்த சேவை எந்த நேரங்களில் பெறக் கூடியதாக இருக்கும்?





oDoc இன் பொது மருத்துவ சேவை எந்த நாளும், 24 மணித்தியாலமும் கிடைக்கின்றது. எம் Home Page இன் உச்சியில் காண்பிக்கப்படும் சேவையிலுள்ள பொது மருத்துவ நிபுணரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் 3-நிமிடத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.

oDoc app இல் உள்ள 400 இற்கு மேற்பட்ட பொது வைத்திய நிபுணர்களும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் ஒன்றில் எப்போதும் சில நிமிடங்காளுக்குள் தொடர்பு கொள்ளக்கூடியவர்களாகவோ அல்லது வாரத்தில் குறித்த நேரங்களில் முன்பதிவு செய்து தொடர்பு கொள்ளக் கூடியவர்களாகவோ இருப்பார்கள். விரும்பும் மருத்துவரையும், ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள நேர இடைவெளியில் உங்களுக்கு வசதியானதையும் தெரிவு செய்யுங்கள். நீங்கள் தெரிந்த நேரத்தில் குறித்த மருத்துவர் உங்களைத் தொடர்பு கொள்ளுவார்.

எனக்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?





எமது வடிக்கையாளார் சேவை இலக்கம் 0770773333, எந்நாளும், 24 மணித்தியாலமும் இணைப்பிலிருக்கும். மேலும், நீங்கள் எம்மை எமது முகநூல் பக்கத்தினூடாகவும் எமது மின்னஞ்சல்முகவரியான info@odoc.life மூலமும் எம்மை தொடர்பு கொள்ள முடியூம்.

நாம் வழங்கும் சேவைகள்

ஆலோசனை மற்றும் மீளாய்வு



  • என்னுடைய பிள்ளை செய்வது இயல்பான செயற்பாடா?

  • நான் இப்படி உணர்வது இயல்பானதா?

  • எனக்கு டெங்கு காய்ச்சல் தொற்றியிருக்கலாமா?

  • நான் இன்னொரு நிபுணரின் ஆலோசனையை நாடலாமா?

  • இந்த மருந்துக்கு பதிலாக பயன்படுத்தக் கூடிய (மாற்றீடான) மருந்து இருக்கிறதா?

  • நான் இந்த மருந்தை சாப்பிட முன்னரா அல்லது சாப்பிட்ட பின்னரா எடுக்க வேண்டும்?

  • நான் இந்த மருந்தை எடுப்பதை நிறுத்தலாமா?

  • நான் மருத்துவ ரீதியில் அவசர கால நிலையில் (நெருக்கடியில்) இருக்கிறேனா?

  • நான் ஒரு நிபுணரிடம் என்னைக் காட்ட வேண்டுமா?

  • எனக்கு உளவளத்துணை தேவையா?

  • நான் இதைச் சாப்பிடலாமா?


சிறிய ஆனால் அவசரமாக கவனிக்கப்பட வேண்டிவை.



  • தடிமன் மற்றும் இருமல்

  • குளிர் காய்ச்சல் மற்றும் ஏனைய வைரசு தொற்று நோய்கள்

  • தலைச்சுற்று மற்றும் வயிற்றுப் போக்கு

  • ஒவ்வாமைகள் (ஒத்துக் கொள்ளாமைகள்)

  • நாட்பட்ட நோய்கள்

  • அரிப்புக்கள், தோல் தொற்றுகள் மற்றும் வலிகள்

  • முதுகு மற்றும் மூட்டு நோவூகள்

  • சிறுநீர் மண்டலத் தொற்று (சலக்கடுப்பு)

  • கண்களில் வரும் பிரச்சினைகள்

  • காது தொடர்பான பிரச்சினைகள்


நடத்தை ரீதியானவை



  • துயரங்களை சமாளித்தல்

  • மனத் தளர்ச்சி

  • பெற்றோருக்கான உளவளத்துணை

  • சிறுவர்கள் நடத்தைகள்

  • வேலையில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்

  • நிதி ரீதியான கஷ்டம்

  • உறவு முறைகள் தொடர்பான உதவிகள்

  • மன அழுத்தத்தின் பின்பான உளவடு.

  • அடிமையாதல் (உதாரணமாக புகைப்பிடித்தல் மதுபானம் இணைதளங்கள்)

  • இருமுனைவுப் பிறழ்வுகள்

  • உண்ணுதல் கோளாறுகள்

  • பெண் - பெண் பாலுறவு, ஆண் - ஆண் பாலுறவு, இருபாலுறவு, பால் இடை மாறுதல் தொடர்பான   விவகாரங்கள்


பெண்கள் மற்றும் ஆண்களின் ஆரோக்கியம்



  • கருத்தரிக்கும் இயலுமை

  • குடும்பத் திட்டமிடல் / கருத்தடை  

  • பாலியல் ரீதியான ஆரோக்கியம்

  • பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்கள்

  • மாதவிடாய் தொடார்பான விவகாரங்கள்

  • பாலியல் ரீதியான பிரச்சினைகள்

  • முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் இடர்

  • கருப்பைக் கழுத்து புற்றுநோய் இடர்

  • மார்பகப் புற்று நோய் இடர்


நாட்பட்ட மற்றும் இறுதிக் கட்ட நோய்கள்



  • கொழுப்பு சத்து (கொலஸ்ரோல்)

  • உயர் இரத்த அழுத்தம்

  • நீரிழிவு

  • உடல் கொழுப்பு

  • கேடயச் சுரப்பி

  • வயது தொடர்பான பிரச்சினைகள்

  • தேவைக்கேற்ப மருந்து சீட்டிலுள்ள மருந்துகளை மீள வழங்குதல்

  • இறுதிக் கட்ட நோய்களுக்கான மரணவலி தணிப்புச் சிகிச்சை (உதா: புற்றுநோயாளி)


நாங்கள் தீர்க்காத நோய்கள்



  • மார்பு வலி

  • உச்ச வலி ஏற்படுத்தும் காயங்கள் (உதாரணம்: உடைந்த எலும்புகள், வெட்டுக் காயங்கள், எரிகாயங்கள்)

  • வாந்தி

  • மயக்கமடைதல்

  • இரத்தத்தத்துடன் கூடிய இருமல்

  • நஞ்சாதல்

  • விசக்கடிகள்

  • வேறு அவசர சிகிச்சைத் தேவைகள்


உங்கள் மருத்துவரை அணுக மிகச் சிறந்த வழி.

oDoc பயன்பாட்டை இன்றே பதிவிறக்கவும்.